
இந்த வருடத்திற்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.