
மிரிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவை வானில் பறக்கச் செய்த இருவரை மிரிஹான பொலிஸார் இன்று (27) கைதுசெய்துள்ளனர்.
நுகேகொட மணல் பூங்காவில் குறித்த சந்தேக நபர்கள் ட்ரோன் கெமராவை பறக்க விட்டுள்ளனர்.
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ட்ரோன் கெமராவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் கங்கொடவில நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.