நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள்தான்

 

தமிழ் மக்களை ஒடுக்கி அடக்குவதற்கே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள்தான்.
இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்படுகிறது.

இந்த சட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் கூட அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அதே போல 2000 க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

Recommended For You

About the Author: Editor Elukainews