தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுத்கும் சம்பரதாய நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சங்குவேலி வயலில் விளைந்திருந்த நெற்கதிகதிர்களை அப்பிரதேச விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று சூரியனுக்கு வணக்கம் தெரிவித்து நெல்லினை அறுவடை செய்தனர்.
அவற்றினை தலையில் சுமந்துசென்று மாட்டுவண்டியில் ஏற்றி பாரம்பரிய முறைப்படி உடுவில்,மருனார்மடம் ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.