
நாளை (26.01.2024) வெள்ளிக்கிழமை வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் 27.01.2024 சனிக்கிழமை முதல் 31.01.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இந்த நாட்களில் அறுவடை செய்தல், காயவிடுதல் போன்ற நடவடிக்கைகளை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.
-நாகமுத்து பிரதீபராஜா-