காலநிலை மாற்றத்தால் உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உலக நாடுகளுக்கு உணர்ந்து வகையில், கிரேட்டா தன்பெர்க் தலைமையில் பிரமாண்ட பேரணி பெர்லின் நாடாளுமன்றத்தின் முன்பு நடைபெற்றது.
கிரேட்டா தலைமையில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் துவங்கப்பட்ட இப்பேரணி, லண்டன், ரோம், ஐரோப்பாவின் பல நகரங்களிலும் நடைபெற்றது.
பெர்லினில் நடைபெற்ற கூட்டத்தில் கிரெட்டா தன்பெர்க் பேசியதாவது:
நாங்கள் மாற்றத்தைக் கோருகிறோம், நாங்கள் தான் மாற்றம்.காலநிலை மாற்றம் காணாமல் போய்விடவில்லை. உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு அழிவுகளும் விரைவாக நடைபெறுவது கால நிலைமாற்றத்தால் நாம் எவ்வளவு பெரிய சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இவ்வாறு தன்பெர்க் தெரிவித்தார்.