
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 08 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு வேனில் திரும்பிச் சென்று வேளை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் பின்னால் அவர்கள் பயணித்த வேன் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.
இதன்போது வேனில் பயணித்த அவிசாவலையைச் சேர்ந்த வேன் சாரதி உற்பட 07 பேர் படுகாயந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.