ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களாகிய விக்கிரமசிங்க பரந்துபட்ட புதிய
கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரூடவ்டுபட்டுள்ளார். மைத்திரிபால
சிறிசேனரூபவ் சம்பிக்கரணவக்கரூபவ் அனுரகுமார திஸ்ஸநாயக்க என்போரை இணைத்து புதிய கூட்டணியை அமைக்கும் எண்ணம் அவருக்கு உண்டு. அனுரகுமார திஸ்ஸநாயக்க
இடதுசாரிக்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணி
கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்ட முற்படலாம். இந்தக் கூட்டணியை அமைத்து விட்டால் முஸ்லீம் கட்சிகளும் ரூபவ் மலையகக் கட்சிகளும் தாங்களாக வந்து இணைந்து விடுவர் என ரணில் கணக்குப் போடுகின்றார். இக்கூட்டணியில் சந்திரிக்கா இணைவாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. மைத்திரி உடனான பகைமை காரணமாக அவர் ஒதுங்கி நிற்க
முயற்சிக்கலாம்.