ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பிய விவகாரம் தொடர்பாக அகில இலங்கை
தமிழரசுக்கட்சியின் உதவிப்பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் மனம்
உடைந்து போயிருக்கிறார். கடந்த 10 ம் திகதி தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில்
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பேச்சாளர் சுமந்திரனும் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் என்போர்
இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தியிருந்தனர். இம்மாநாட்டின்
பின்னர் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் 09 பேர் தமிழத்தேசிய
பாராளுமன்ற அமையம் என்ற கடிதத் தலைப்பில் ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பியது
தொடர்பாக சம்பந்தப்பட்ட 09 பேரிடமும் விளக்கம் கேட்பது என
தீர்மானிக்கப்பட்டது. இதற்கான கடிதத்தினை சத்தியலிங்கம் சம்மந்தப்பட்ட
உறுப்பினர்களுக்கே அனுப்பி வைத்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீதரனுக்கு அவரது முக்கியத்துவம் காரணமாக விலக்களிப்பது எனத்
தீர்மானிக்கப்பட்டாலும், பின்னர் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டு அவருக்கும்
கடிதம் அனுப்பப்பட்டது. குறித்த கடிதங்களைப் பெற்றுக் கொண்டஉறுப்பினர்கள் கோபமடைந்து தலைவர் மாவைசேனாதிரரிவிடம் அரசியல் குழு, மத்தியகுழு என்பவற்றை கூட்டாது எப்படி தீர்மானங்களை எடுத்தீர்கள?; என சட்டப்படியான கேள்விகளைக் தொடுக்கத் தலைவர் ஆடிப்பொய்விட்டார். தலைவர் ஒருவாறு சமாளித்து அப்படி ஒரு தீர்மானமும்
எடுக்கவில்லை, அதனை விட்டுவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். சி.வி.கே.
சிவஞானமும் நீங்கள் பதில் ஏதும் அளிக்கத்தேவையில்லை. மத்திய குழுவில்
அவற்றைப் பார்க்கலாம் எனக் கூறியிருக்கிறார்.
மாவையினதும் சி.வி.கே. சிவஞானத்தினதும் இந்தக் கருத்துக்கை அறிந்த பதில்
பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் தலைவரிடம் தொடர்பு கொண்டு தீர்மானம் எடுத்த
விடயத்தினை கேட்டிருக்கின்றார். தீர்மானங்கள் ஏதும் எடுக்கவில்லை. விளக்கங்களைக்
கேட்போம் என்றே கூறியிருந்தோம், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என மாவை
கூறியிருக்கின்றார். தற்போது அனைவராலும் கைவிடப்பட்ட நிலைக்கு சத்தியலிங்கம் சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு உங்களுடன் தனிப்பட்ட கோபம் எதுவும் எனக்குக் கிடையாது. எனக் குறுஞ் செய்தி அனுப்பியிருக்கின்றார். இனிமேல் எழுத்துமூல
தீர்மானம் இல்லாமல் பதில் பொதுச் செயலாளர் நகர்வுகளை மேற்கொள்ள
மாட்டார் என்றே கூறலாம்.