*1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.*
*1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.*
*1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.*
*1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.*
*1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.*
*1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.*
*1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.*
*1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர்.*
*1984 – வெப்ப மண்டலச் சூறாவளி டொமொய்னா தெற்கு மொசாம்பிக்கைத் தாக்கியதில், 214 பேர் உயிரிழந்தனர்.*
*1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.*
*1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.*
*2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.*
*2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர்.*
*2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.*
உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள elukai news உடன் இணையுங்கள்