வடமராட்சி கிழக்கில் இரு தேவாலயங்களில் நேற்று அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டு அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றது.
அந்தவகையில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்திலும்,கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திலும் நேற்று திருச்செபமாலையுடன் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த அன்னதான நிகழ்வில் பங்குத்தந்தைகள்,ஆலய அருட்பணி சபையினர்,பங்குமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.