*⭕வரலாற்றில் இன்று_______Jan29*

*1916 – முதலாம் உலகப் போர்: பாரிசு செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.*

*1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார்.*

*1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.*

*1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.*

*1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.*

*1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.*

*1989 – பனிப்போர்: அங்கேரி தென் கொரியாவுடன் தூதரக உரைவை ஏற்படுத்தியது.*

*1996 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சாக்கு சிராக்கு அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்தார்.*

*1996 – இத்தாலியில் வெனிசு நகரில் உள்ள லா பெனீசு ஓப்பரா மாளிகையான தீயினால் அழிந்தது.*

Recommended For You

About the Author: Editor Elukainews