
திருநெல்வேலி சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன், ஜேர்மனில் இருந்து வந்த பெண்மணியின் கைப்பயில் இருந்த 500யூரோ பணம் இலங்கை பணம் 20000 உட்பட 1 லட்சத்து இருபதாயிரம் ரூபா பணம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பன களவு போனது. இது குறித்து அந்த பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு தகவலுக்கமைய, கோப்பாய் பொலிசாரும் இணைந்து சங்கானையைச் சேர்ந்த 22 வயது ஆண், 28 வயது பெண் ஆகிய சகோதரர்களை கைது செய்து பொருட்களையும் மீட்டுள்ளனர்.
விசாரணைகளில், சகோதரி கைக்குழந்தயை மக்கள் உள்ள இடங்களில் கொண்டு சென்று ஏமாற்றி களவு எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.