
வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் இன்று நாகர்கோவில் பிரதான உள்ளக நாகதம்பிரான் ஆலய முற்பகுதி வீதி தொடக்கம் கண்ணகை அம்மன் கோவில் முன் பிரதான வீதி ஓரமாக உள்ள சதுப்பு நிலத்தை அண்டிய பகுதிகளில் நிழல் தரும் மரமான மருத மரம் நடும் திட்டத்தை நாகர்கோவில் கிராம லியோ இளைஞர் அணியினர் முன்னெடுத்தனர்.

“மரம் வளர்ப்போம் பசுமையான இயற்கையை பேணுவோம்”என்ற தொனிப் பொருளில் குறித்த இளைஞர்களால் இந்த செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாடசாலை மாணவர்கள்,கிராம நலன் விரும்பிகள்,சுகாதாரப்பரிசோதகர் , இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர். 

இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை கடற்கரை வீதி ஓரங்களில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் மரம் நடுகை இடம்பெறவிருப்பதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் குறித்த இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

