
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயன்றுள்ளனர். இதன்போதே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.