
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சித்தாண்டி இளஞ்சைவ மாணவ மன்றத்தின் அனுசரணையுடன் குடும்பிமலை ,இரளக்குள பிரதேச மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைய வைக்கும் நோக்கோடு இக் கல்விச் செயற்திட்டம் சுவாமி நடராஜானந்தாஜீ சிறுவர் புனர்வாழ்வு கல்லுரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு2023ஆண்டுகுறித்த பரீட்சையில்சித்திபெற்ற இலுக்கு பொத்தானை பாடசாலை மாணவியை கெளரவித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரத்தினம் திருநாவுக்கரசு அவர்களால் துவிச்சக்கரவண்டியும்.வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கல்குடா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், இளஞ்சைவ மாணவ மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.