
வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உள்ளூர் போட்டித் தொடரான சக்திவேல் சீசன்- 2 இன் இறுதி போட்டி சக்திவேல் விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
விளையாட்டுக் கழக தலைவர் சி.சிவதீசன் தலைமையில் இன்று மாலை 04.00 ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு வைத்திய கலாநிதி வே.சிவநேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு ஆழியவளை கிராம அலுவலர் அ.மியூரிலக்சி,மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கிண்ணத்தை தீர்மானிக்கும் போட்டியில் செவ்வேல் அணியை எதிர்த்து தமிழ்வேல் அணி மோதியது.விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிய தண்டை உதை மூலம் தமிழ்வேல் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
முதலாவது இடத்தை பெற்றுக் கொண்ட அணியினருக்கு 15000/-ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அணியினருக்கு 10000/-பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.