நேற்றையதினம் (30.01.2024) யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் இரவு 8.00 மணியளவில் மொரவெவ பகுதியில் வைத்து எரிபொருள் இன்றி நின்றுள்ளது.
அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்று எரிபொருளை பெறுவதற்காக அக்கிராம மக்கள் எரிபொருள் வழங்கியும் சாரதி அதனை உதாசீனம் செய்ததால் பயணிகள் வீதியை மறித்து போராடியுள்ளனர். இதனால் சிலமணிநேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் எரிபொருளை பெற்றுக் கொண்டு பஸ் தனது பயணத்தை ஆரம்பித்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் பொறுப்பற்ற செயலின் காரணமாக இவ்வாறான நிலையை எதிர்கொண்டதாக பயணிகள் கவலை வெளியிடுகின்றனர்.