ஐ.ம.ச போராட்டத்தின் மீது கண்மூடித்தனமான தாக்குதல்; முஜிபுர் வைத்தியசாலையில்..!

ஐக்கிய மக்கள் சக்தி வரி சுமைக்கு எதிராக நேற்று (30) நடத்திய போராட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியதுடன் நீர் தாங்கிகள் மூலம் நீர் பாய்ச்சி கண்மூடித்தனமான தாக்குதலை பொலிஸார் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு 2024 என்ற தொனிப்பொருளில் நடந்த போராட்டம் நேற்று (30) பி.ப 1.30 மணிக்கு விஹாரமஹாதேவி பூங்காவில் இருந்து ஆரம்பமானது. எதிர்க்கட்சி தலைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேரணியாக சென்றார். இதன்போது பொலிஸார் கடுமையான கண்ணீர் புகை தாக்குதலை நடத்தினர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வீடு செல்! வீடு செல்! அரசாங்கமே வீடு செல் , நிராயுத பாணிகளான எம் மீது தாக்குதல் என்ற கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் தாக்குதலினால் காயமுற்றோரை எதிர்க்கட்சி தலைவர் சென்று பார்வையிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews