நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews