யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் தோரணை வாயில் இசைச் சங்கமம் நிகழ்வு இன்று கைலாசபதி கேட்பேர் கூடத்தில், 41வது அணியின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சத்தியமூர்த்தி தனுசன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடபீடாதிபதி சி.ரகுராம் கலந்துகொண்டார்.
இதில் பல்கலைக்கழக மாணவ, மாணவி களின் தோரணைவாயில் தனிப்பாடல்கள், குழுநடனங்கள், கவிதைகள், பாடல்கள் என்றும் இசையாற்றுகையினை அரங்கேற்றினர்.
மேலும் மாணவ, மாணவிகளினால் சமூக செயற்பாட்டுகளும் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக சிற்றுண்டிகள் தயாரித்து அதனை வீதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கியதுடன், மோட்டார் சைக்களுக்கான துப்பரவு பணி செயற்பாட்டினையும் முன்னெடுத்தனர்.
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியதலைவர் யோகேஸ்வரன் நெவில்குமார், முன்னாள் கலைப்பீட மாணவ ஒன்றியத் தலைராகிய இ.கிரிசாந்தன்,சி.ஜெல்சின், செயலாளர்கள், பொருளாளர்கள், அனைத்துபீட மாணவர்கள் பலரும் பங்குகொண்டனர்.