
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் இலங்கையின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 3 ஆம் திகதி இரவிலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.