2024 ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மட்டுமே 136 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காலப்பகுதிக்குள் 1,189 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 130 பாரிய விபத்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2023ம் ஆண்டில் 22,804 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 2,280 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.