வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பண்டத்தரிப்பு வட்டாரத்தில் பல பிரதான வீதிகள் உள்ளக வீதிகள் மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் இருளடைந்து காணப்படுகின்றன. இது தொடர்பில் பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு பொதுமக்கள் எழுத்துமூலமாகவும் நேரிடையாகவும் முறைப்பாடு செய்தும் திருத்த பணிகள் மந்தகதியிலேயே இருப்பதால் பல வீதிகள் இருளடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக. பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனார். இது தொடர்பில் பண்டத்தரிப்பு வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அருள்குமார் ஜோன்ஜிப்பிரிக்கோ கருத்து தெரிவிக்கையில் பண்டத்தரிப்பு வட்டாரத்திற்குட்பட்ட பல பிரதான உள்ள வீதிகளின் மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளாதால் பொதுமக்கள் பெருஞ்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனார். பல வீதி விபத்துக்கள் வீதி இருளடைந்த நிலையில் இருப்பதால் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் இரவு நேர பாதுகாப்பான பயணம் கேள்விக்குள்ளாகியுள்ளது இருளடைந்த பகுதிகளில் சமூகவிரோதிகளின் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது இது தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக நான் நேரில் முறையிட்டும் கூட சில பிரதான வீதி மின்விளக்குகளை தவிர ஏனைய பிரதான வீதி உள்ளக வீதி பகுதிகள் இன்றுவரை இருளடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது பண்டத்தரிப்பு வட்டாரத்தில் மட்டுமல்லாது பிரதேச சபையின் ஏனைய வட்டாரங்களிலும் இப் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. பிரதேசசபை அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் விரைந்து பழுதடைந்துள்ள வீதி மின்விளக்குகளை திருத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதோடு பொது மக்களின் இரவு நேர பாதுகாப்பான பயணத்திற்கு வழி ஏற்படுத்திட வேண்டும் என்றார்.