
தாமரைக் கோபுரத்தினை 50,000 வெளிநாட்டவர்கள் பார்வையிட்டுள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50ஆயிரமாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பு தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதிலிருந்து நேற்று(01) வரையான காலப்பகுதியில் மட்டும் 50 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளனர்.