
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு 01.02.2024 அன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்து கொண்டார்.

இதில் ஓடிச் நடனம், கதகளி நடனம், சத்தியா நடனம், மணிப்புரி நடனம், என்னும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் தமிழ் அரசியல்வாதிகள், ஆன்மீக தலைவர்கள், பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், கலைஞர்கள், இந்திய தூதர அலுவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.