யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் கருவி மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் கட்டிட நிர்மாணத்திற்காக 230,000 ரூபா பெறுமதியான 100 பைக்கற் சீமெந்துகளை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் நேரடியாக கொண்டுசென்று வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வெள்ளிக்கிழமை வாராந்த நிகழ்வாக ஆசிரியர் சிவஞானம் பாலமுரளி அவர்களின்
கந்தன் மகிமை ஆன்மீக அருளுரை காலை 10.40 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள தொண்டைமானாறு தெற்கு ஜே/383 கிராமசேவையாளர் பிரிவில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு நாற்றுக்கள், விதைப்பைக்கற்றுக்கள் வழங்குவதற்காக ரூபா 20,000 நிதியும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.
இதே வேளை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் வெளொயீடான ஞானச்சுடர் 313 ஆவது மலர் வெளியீடு கடந்த 26/01/2024 வெள்ளிக்கிழமை அன்று ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிமள் தலமையில் இடம் பெற்றுள்ளது.
வெளியீட்டுரையினை இளைப்பாறிய வலிகாமம் பிரதிக்கல்விப்பணிப்பாளர் – சு.தேவமனோகரன் அவர்களும், மதிப்பீட்டுரையினை – இளைப்பாறிய அதிபர் ஆ.சிவநாதன் அவர்களும், ஆற்றியதை தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு ரூபா 300000/- பெறுமதியில் மாதாந்தம் வழங்கப்படும் உலர் உணவு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வுகளில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள், சைவ கலை இலக்கிய பேரவை நி்வாகிகள், ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.