
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2024) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஏனைய ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து பிரதேச செயலகத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் மாணவர்கள் , முப்படையினர் ஆகியோரின் அணிவகுப்புக்கான ஒத்திகைகள் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்தன. மேலும் ஏ9 வீதியினை தற்காலிகமாக மூடுவதற்குரிய நடவடிக்கைளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத்சந்திர தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொள்ளவுள்ளார்.