நிகழ்நிலை காப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…!

சுகாதார கட்டமைப்புக்கள் அனைத்தும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மிகவும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் துணை மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா பிரபாகரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார ஊழியர்களின் குறித்த பிரச்சினையை இந்த அரசு முடிவுக்கு கொண்டுவராத பட்சத்தில் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து தாம் அரசுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், சமூக ஊடகங்களுக்கான தடைச்சட்டம் ஒன்றினை இந்த பாராளுமன்றம் கொண்டுவந்திருக்கிறது, குறித்த சட்டமானது பொதுமக்களுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையினை கொண்டுவந்துள்ளது.

சுதந்திரமாக ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ இயங்க முடியாத அளவிற்கு இச்சட்டமானது பொதுமக்களை இறுக்கியுள்ளது.

வார்த்தைப் பிரயோகங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த கருத்துச் சுதந்திரத்தினை வெளிப்படுத்த இந்த அரசு வழிவகுக்குக்க வேண்டும்.

அதனை விடுத்து இப்படியான சட்டதிட்டங்களூடாக மக்களை முடக்குவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது, இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews