22 கோடி ரூபாய் பெறுமதியான 16 கிலோ தங்கத்தை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.
போலி வணிகப் பெயர்களைப் பயன்படுத்தி சரக்குகள் பிரிவு மூலம் கூரியர் நிறுவனங்கள் ஊடாக இந்தத் தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் கோப்பி தயாரிக்கும் இயந்திரங்கள் என துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொதிகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உதிரிப்பாகங்களின் உள்ளே உள்ள தொழில்நுட்ப பாகங்கள் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டு சுங்கத்தை தவறாக வழிநடத்தும் முயற்சி இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு 22 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்துக்குப் புறம்பாக தங்கம் மற்றும் பொருள்கள் இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.