![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/FB_IMG_1707031326489-818x490.jpg)
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடந்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீது நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி சாலை மறியல் போராட்டமும் ஆரம்பமாகியுள்ளது.