
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, சுதந்திர தினம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஆனால் நாங்கள் சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை. சுதந்திர தினத்தில் கூட இந்திய இழுவைப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.