
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்கள் குறித்து அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்புத்துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள்களை விடுவிக்க மத்திய வங்கியில் இருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை பாதுகாப்பு இருப்பாகப் பராமரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.