*1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.*
*1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.*
*1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.*
*1918 – ஐரோப்பாவுக்கு அமெரிக்கப் படைகளை ஏற்றிச் சென்ற துசுக்கானியா என்ற கப்பல் அயர்லாந்துக் கரையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.*
*1918 – செருமனியின் விமானம் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுவே அமெரிக்காவின் முதலாவது வான்வழி வெற்றியாகும்.*
*1922 – ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.*
*1939 – இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் 68-வது தலைவரானார்.*
*1941 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் எரித்திரியாவின் கெரென் நகர் மீதான தாக்குதலை ஆரம்பித்தன.*
*1958 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையின் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.*
*1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.*
*1960 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.*
*1962 – அல்சீரியாவுக்கு விடுதலை தரப்பட வேண்டும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் கோரிக்கை விடுத்தார்.*
*1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.*
*1975 – பெருவின் லிமா நகரில் காவல்துறையினர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.*
*1985 – 2,131 ஆண்டுகளாக ரோம், கார்த்திஜ் நகரங்களுக்கிடையே இடம்பெற்றுவந்த போரை முடிவுக்கும் கொண்டுவரும் பொருட்டு இரு நகர முதல்வர்களுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.*
*1994 – சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.*
*1997 – சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய வங்கிகள் பெரும் இனவழிப்பில் உயிர்தப்பியவர்களுக்காக $71 மில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தன.*
*2000 – செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர்.*
*2004 – எயிட்டியில் புரட்சியாளர்கள் கோனாய்விசு நகரைக் கைப்பற்றினர்.*
*2008 – தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.*