*1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.*
*1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.*
*1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.*
*1951 – அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.*
*1952 – ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.*
*1958 – செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.*
*1959 – டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.*
*1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.*
*1978 – அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.*
*1989 – போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.*
*1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.*
*2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.*
*2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.*
*2016 – தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.*