![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240206_083921-818x490.jpg)
கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனதிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் ரெக் நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் குறித்த விஜயம் இடம்பெற்றது.
இதன்போது, தொழில்சார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த அவர், நிறுவன முதல்வர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும், தொழில்சார் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கயன் இராமநாதன், இலங்கை ஜேர்மன் ரெக் நிறுவன தலைவர் மேஜர் ஜெனரல் கல்ப சஞ்ஜீவ, கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.