மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 அம்புலன்ஸ் சேவை மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது – முள்ளியவளை, மணலாறு பகுதிகளிலும் சேவைகள் நிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை முள்ளியவளை, மணலாறு பகுதிகளிலும் சேவை பல நாட்களாக இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 3 மாதங்களாக மாங்குளம் பகுதியில் குறித்து சேவை இல்லாமை காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்வேறு பிரதேச மக்கள் பெரும் துயரங்கங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக மாங்குளம் பிரதேசத்தை அண்டிய பாண்டிய குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, கோட்டைக்கட்டிய குளம், அம்பலபெருமாள்குளம், அம்பகாமம், தட்சடம்பன், மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1990 எனும் இலவச அம்புலன்ஸ் சேவையை நாளாந்தம் மக்கள் பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த ஆம்புலன்ஸ் சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் துயரங்களிற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக நட்டாங்கண்டல் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமெனில் 3000 ரூபாய் முச்சக்கர வண்டிக்கு செலுத்தி செல்லவேண்டும்.
அதேவேளை, உரிய நேரத்துக்குள் சிகிச்சையை பெற வேண்டிய நோயாளர்கள் உயிரிழக்கும் அபாய நிலையும் ஏற்படுகிறது. இந்த சேவையானது மக்களிற்கு இன்றியமையாததாகின்றது.
மேலும், A9 வீதியில் கொக்காவில் தொடக்கம், மாங்குளம் வரை அதிகளவான விபத்துக்கள் பதிவாகின்றது. இதன்போது, வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சியில் உள்ள 1990 அம்புலன்ஸ் சேவையையே பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இதேபோன்று முள்ளியவளை மற்றும் மணலாறு பகுதியை அண்டிய பகுதி மக்களும் இந்த சேவையை பெற முடியாத நிலையில் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் மாங்குளம் பகுதியிலிருந்த அம்புலன்ஸ் முள்ளியவளைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சேவையில் ஈடுபட்ட வாகனம் பழுதடைந்த நிலையில் அனுப்பப்பட்ட மற்றய வாகனமும் பழுதடைந்துள்ளது.
பழுதடைந்த வாகனங்களை விரைவாக திருத்தி சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews