*1904 – அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.*
*1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.*
*1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.*
*1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.*
*1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.*
*1967 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.*
*1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.*
*1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.*
*1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.*
*1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.*
*1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.*
*1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.*
*1991 – எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.*
*1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.*
*1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.*
*1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.*
*2005 – விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.*
*2009 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.*
*2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.*
*2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.*