இலங்கை கடற்படை அதிரடி-நடுக்கடலில் 19பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews