உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலில் இருந்தும் கன்டெய்னர் பெட்டிகளை இறக்கும் பாரந்தூக்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தது.

கப்பலில் இருந்து தரைக்கு இறக்கும் மிகப்பெரிய 12 கிரேன்கள் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்பகுதியாக 3 கிரேன்கள் கடந்தவாரம் இலங்கைக்கு வந்துசேர்ந்தது.

12 ( sts ) கிரேன்கள், 40 ரயிலுக்கு ஏற்றும் தானியங்கி கிரேன்கள், பெட்டிகளை சுமந்து செல்லும் கெரியர்கள் என்பன 282மில்லியன் டெலருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. குறித்த பாரம்தூக்கிகள் கிழக்கு முனையத்தில் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகம் சுமார் 85லட்சம் கென்டைனர் பெட்டிகளை கையாளக்கூடிய திறன் கொண்டதாக இருந்து வருகிறது. மேற்கு முனையம் மற்றும் கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்தபின் சுமார் 350லட்சம் (3.5கோடி) பெட்டிகளை கையாளக்கூடிய திறன் கெண்டதாக மாற்றமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews