
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி அகிலேந்திரா ஐயர் அவர்கள் இன்று 09.02.2024 முருகனின் சிறப்பு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் முருகன் கழலடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி காதோரம் வந்தது . அவரது இழப்பை எம்மால் தாங்க முடியவில்லை.
எந்நிதியும் தருவான் செல்வச்சந்நிதி வெள்ளி வேலவனுக்கு தண்ணீரும் பூவும் கொண்டு மௌன பூசை செய்த கதிர்காமர் பரம்பரை வழித்தோன்றலாய் வந்த ஐயர்களின் வரிசையில் அன்புடனும் அகமகிழும் சிரிப்புடனும் அடியார்களுடன் பழகும் சாந்த குணம் கொண்ட ஐயா அவர்கள் முருகனின் கழலில் ஆத்மா சாந்தியடைய ஆற்றங்கரை வேலனை மனமுருகி வேண்டுகின்றோம்.
அன்னாரது இறுகி கிரியைகள் இன்று பி. ப 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைகளுக்காக காட்டுப் புலம் இந்து மயானம் கொண்டு செல்லப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.