தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமுமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. இறைபதம் அடைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து இத் தினத்தில் விரதமிருப்பர்.
தை அமாவாசை அன்று, ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து வழிபடுவது சிறப்பானது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் நாளைய தினம் விசேட அபிசேக ஆராதனைகள் நிகழவுள்ளது. தொடர்ந்து காலை 9:30 மணியளவில் நாராயணனின் திருவடி பதிந்த புனித திருவடிநிலையில் சமுத்திர தீர்த்தமாடுவதற்காக பொன்னாலை வரதராஜர் மஞ்சத்தில் புறப்பட திருவருள் கூடியுள்ளது.
இப்புண்ணிய நிகழ்வில் பங்குபற்றி திருவருளை பெறுவோமாக.
பரிபாலன சபை