
பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாகவும் அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

தரிசு நிலமாக காணப்பட்ட குறித்த காணியில் நெற்செய்கை மேற்கொண்டு இன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடு தொடர்பில் அப்பாடசாலை சமூகத்தினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தரிசு நிலங்களாக காணப்படும் நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது.