
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வயலின் இசை கச்சேரி இடம் பெற்றது.

இதில் வயலீனை ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமன், மிருதங்கம் நந்தகுமார், தம்புரா விசயன் ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக கலந்து கொண்டு இன்னிசை விருந்தை நடாத்தியிருந்தனர்.மேலும் ஆண்மீக உரையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலா கலாசார பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.