இலங்கையில் பல்வேறு இடங்களில் அநாவசியமான வீதிவிபத்துக்கள் இடம்பெற்று பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்தாண்டு ஒப்பிடும்போது வீதிவிபத்துக்கள் சற்று அதிகரித்துக் காணப்படுவதோடு மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது.
இதனை தடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடமாகாண சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தனது செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது
அதன் இயக்குனர் அருட்தந்தை றமேஷ் அமதி அடிகளார் ஊடகங்கள் வாயிலாகவும் அண்மையில் அழைப்பு விடுத்திருந்ததோடு இதன் முதல் கட்டமாக துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்கள் முன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ரீதியாக சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்துடன் பல்வேறு நலன்விரும்பிகள் கைகோர்க்க உள்ளதோடு அனைவரையும் பொதுநலன் கருதி ஒன்றாக பயணிக்க வருமாறு வடமாகாண பணியகத்தின் இயக்குனர் அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது