
யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு 11.02.2024 அன்று சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
குறித்த மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை கொண்டாடியுள்ளனர்.

தமிழரின் தை மாத நாளின் இறுதி நாளின் சுப நாளினை முன்னிட்டு இந்த நாளினை முக்கியத்துவத்தினை வருடா, வருடம் கொண்டாடி வருகின்றனர். மீனவ சமூகத்தினர் 09 நாளாக நாகர்கோவில் நாக தம்பிரானுக்கு விரதம் இருந்து சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் கரைவலை மீன்பிடி நாள்தின நிகழ்வினை கடைப்பிடித்தனர்.
கரைவலை பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கான நாள் விற்பனை சந்தைப்படுத்தலை மீனவ சம்மாட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் முன்னெடுத்தனர்.

கடற்கரை வாழ் மீனவ சம்மாட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலி வேலை செய்யும் குடும்ப மீனவர்கள் தமது மகிழ்ச்சி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
