பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தை கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண , இராணுவ வீரர்களை கொண்டு எரிபொருள்களை கொண்டுசெல்ல பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. 5 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இராணுவ வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.