
தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மரத்திலிருந்து வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மெதகம பிட்டதெனிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்ததில் பலத்த காயமடைந்த அவர், மெதகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.