சீனாவிலிருந்து 99 ஆயிரம் மொட்ரிக் தொன் உரங்களை இறக்குமதி செய்யவே அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது. இன்று சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள பசளைகளை, பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்று அறிக்கைகளும் தோல்வியடைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏவேர்னியா பெஸலஸ் வகை உட்பட மேலும் இரண்டு வகையான பக்டீரியாக்கல் பரிசோதனை மாதிரிகளில் அடங்கியுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.
ஏவேர்னியா என்ற பக்டீரியா வகைகள் குறிப்பாக மலைநாடு போன்ற பிரதேசங்களில் கிழங்கு மற்றும் கரட் பயிர்ச் செய்கைகளை முற்றாக அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவையாகும். ஏவேர்னியா பக்டீரியாக்கள் மூலம் கிழங்குச் செய்கை அளிந்து போன வரலாறுகள் உள்ளன.
இவ்வாறு ஏவேர்னியா உள்ளடக்கப்பட்டுள்ள பசளைகளையே இங்கு இறக்குமதி செய்ய முற்படுகின்றனர்.
கொலிபோர்ம் பக்டீரியாக்கள் உள்ளதாக அறிக்கையில் வெளிப்படுத்தப்படுள்ளன. அதில் 10 சதவீதம் குறைந்த அளவிலான கொலிபோர்ம் பக்டீரியாக்கல் அடங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான பக்டீரியாக்கல் நிலத்துடன் கலந்தால் தொடர்ச்சியாக உயிர்வாழும். நிலத்தில் தொடர்ச்சியாக பரவும்.
இத்தகைய கொலிபோர்ம் பக்டீரியாக்கல் மனிதர்கள், மிருகங்களின் சடலங்களில் இருந்தே உருவாகிறது. கடல்பாசி மூலம் தயாரிக்கப்பட்ட பசளைகளையே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்போவதாக அரசாங்கம் கூறினால் அத்தகைய கடல்பாசியுடன் எவ்வாறு கொலிபோர்ம் பக்டீரியாக்கல் கலந்தன என்று வினவுகிறோம்?
இத்தகைய பசளைகளையே சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இலங்கை நிலத்துடன் கலக்க முற்படுகின்றனர். இதனால்தான் சீனாவின் களிப்பறை பசளைகளை இங்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முற்படுவதாக நான் கூறினேன்.