
முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார்.
கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று ( 14.02.2024) பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த சில காலங்களாக சஜித்துக்கு ஆதரவு வழங்கி இருந்த நிலையிலேயே தற்போது கட்சியி்ல் உறுப்பினராக இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.